Friday, March 26, 2010

கூட்டமைப்பாகச் செயற்படுவோம்.

"தெள்ளு தமிழைக் காப்பதற்கும்
தேசிய உரிமை மீட்பதற்கும்
நல்ல ஈழ விடுதலைக்கு
நற்றுணை யாக நிற்பதற்கும்
வெள்ளம் போலத் தமிழரெல்லாம்
வேறு பாட்டை மறந்துவிட்டுக்
கொள்கை வழியில் கைகோர்த்துக்
கூட்டமைப்பாகச் செயற்படுவோம்!!!

விரிந்து பிரிந்து வேறுபட்டு
விலகி நின்றால் குறி இலக்கை
நெருங்கி வெல்ல முடியாது
நேரிய கொள்கை அடிப்படையில்
ஒருங்கிணைந்து தமிழரெல்லாம்
ஓரணியாகச் செயற்பட்டால்
பொருந்தும் வெற்றி நமக்காகும்
புகழும் நமக்கே ஆகுமையா!!!"

No comments:

Post a Comment